நகரை கலக்கும் நடிப்பு சக்கரவர்த்தி…!
கோவை நகரில் பல்வேறு இடங்களில் நடிப்புச் சக்கரவர்த்தி என்ற பட்ட பெயருடன் போஸ்டர்கள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினி கமல் விஜயகாந்த் அஜித் விஜய் எம்ஜிஆர் சிவாஜி என டாப் லெவல் சூப்பர் ஹீரோ படங்களும் இடம்பெற்றுள்ளது.
குகன் சக்கரவர்த்தி என்பவர் வங்காள விரிகுடா என்ற பெயரில் சினிமா படம் எடுப்பதாக தெரிகிறது. இதற்கு மக்களை கவரும் வகையில் போஸ்டர் ஓட்ட வேண்டுமென நினைத்து இந்த மாதிரி செய்திருக்கிறார். கோவை நகரில் ரயில்வே ஸ்டேஷன் ஜிஎச் மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் இந்த போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
