கோவையில் காரில் தீப்பிடித்து உடல் கருகி வாலிபர் சாவு
கோவை குளத்து பாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல் . 22 வயதான தனியார் நிறுவன இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காளியாபுரத்திலிருந்து திருமலையாம்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரோட்டோரத்தில் பெட்ரோல் குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது இதற்காக குழாய்களை ரோட்டோரம் வைத்திருந்தனர். எதிர்பாரா விதமாக அந்த குழாய் மீது கார் மோதியது . இதில் கார் உடனடியாக தீப்பிடித்தது. காரில் இருந்த இரண்டு பேர் உடனடியாக இறங்கி விட்டனர். வாகனத்தை ஓட்டிய விமல் காரில் இருந்து இறங்க முயன்ற போது
அவரது உடலில் தீ பற்றியது . இதில் பலத்த தீக்காயம் அடைந்த விமல் அதே இடத்தில் பரிதாபமாக துடிதுடிக்க இறந்தார். நண்பர்கள் இருவரும் காப்பாற்ற முயன்ற போதும் அவர்களால் முடியவில்லை.
இது தொடர்பாக கந்தே கவுண்டன் சாவடி போலீசாருக்கும் கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இரவில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
