லங்கா கார்னரில் குழி தோண்டீட்டே இருக்காங்க..

கோவை ரயில்வே ஸ்டேஷன் லங்கா கார்னர் பகுதியில் குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. சாக்கடை நீர் பாய ஸ்கொயர் கான்கிரீட் குழாய் பதிக்கப்பட்டது. இந்த வழியே ஏகப்பட்ட கேபிள் நிறுவனங்களின் ஒயர்கள் குவிந்து கிடக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக குழி தோண்டி கோவை மாநகராட்சி நிர்வாகம் வேலை செய்து வருகிறது. ஆனால் பணி இன்னும் முடியவில்லை. இதற்கிடையே ரயில்வே நிர்வாகம்

லங்கா கார்னர் பாலத்திலிருந்து தண்ணீர் ஒழுகுவதை தடுக்கும் வகையில் கான்கிரீட் பூச்சு பணியை துவக்கி இருக்கிறது‌ . இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பணிகள் நடப்பதால் ரயில்வே ஸ்டேஷன் லங்கா கார்னர் ஜி எச் மற்றும் கலெக்டர் அலுவலகம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நீடிக்கிறது. எப்போது பணி முடியும் எப்போது சிக்கல் இல்லாமல் செல்ல முடியும் என மக்கள் தவிப்படைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *