நடிகர் விஜய் மீது நடவடிக்கை கோவை போலீசில் புகார்…!

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளரான கோவைகணபதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (35) என்பவர் தனது கட்சி நிர்வாகிகள் சிலருடன் இன்று புகார் மனு அளித்தார்.

இதில் அவர் ,” எனக்கு ஐந்து வயதில் மகன் இருக்கிறார்.
நடிகர் விஜய் ரசிகரான அவர் இந்த தேர்தலில் அவருக்கு விசில் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என எனக்கு நிபந்தனை விதித்தார். அவர் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டால் நான் சாப்பிட மாட்டேன் தூங்க மாட்டேன் சொன்ன பேச்சை கேட்க மாட்டேன் என அடம் பிடிக்கிறார். என் மகனைப் போல் மேலும் மன சிறுவர்கள் இதே போல் தங்களது பெற்றோர்களை விஜய் கட்சிக்கு ஓட்டு போட சொல்லி தொந்தரவு செய்வதாக தெரிய வந்தது.

இது குறித்து நான் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு இமெயில் மற்றும் தபால் மூலமாக புகார் அனுப்பியுள்ளேன்.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலீசார் மட்டும் மாவட்ட தேர்தல் பிரிவு இதில் அலட்சியமாக இருப்பதால் விரைவில் நான் நீதிமன்றத்தை நாட போகிறேன் . சிறுவர்களை உங்கள் பெற்றோரிடம் சொல்லி ஓட்டு போட வையுங்கள் என நடிகர் விஜய் வீடியோ பதிவு மூலமாக தூண்டி இருப்பது சரியல்ல.
விஜய் மீது சிறுவர் நீதிச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *