எஸ்.பி வேலுமணிக்கு இறங்கு முகம்… செ. ம வேலுசாமி குரூப் வசம் அதிமுக…

கோவை மாவட்ட அதிமுகவில் கடந்த 15 ஆண்டாக எஸ்.பி வேலுமணியின் ஆதிக்கம் தான் இருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து அப்போது கோவை மாநகராட்சியின் மேயராக இருந்த செ.ம வேலுச்சாமியின் பதவி பறிக்கப்பட்டது. சீனியரான செ.ம வேலுச்சாமி இரு முறை அமைச்சராக இருந்தவர். தனக்கு பதவி பறிபோன பின்னர் செ.ம வேலுச்சாமியின் அரசியல் செல்வாக்கு சரிந்தது.

இவரின் ஜூனியராக இருந்த எஸ்.பி வேலுமணி கட்சியை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தார். கட்சி விசுவாசத்தில் தீவிரமாக இருந்தும் செ.ம.வேலுச்சாமிக்கு பதவி கிடைக்கவில்லை. சுடந்த 3 தேர்தல்களில் அவருக்கு எந்த தொகுதியிலும் சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு மட்டுமல்ல அவரின் ஆதரவாளர்கள் பாருக்கும் கட்சியினருக்கு ஒரு கவுன்சிலர் கூட் கூட வழங்க எஸ்.பி வேலுமணி முன் வரவில்லை.

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி பங்கேற்ற போது அதை செ.ம வேலுச்சாமி கண்டித்ததால் ஏற்பட்ட மோதல் பகையாக மாறியது. இந்த நிலையில், எஸ்.பி வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திரும்பிய நிலையில் செ.ம வேலுச்சாமிக்கு கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி பகை உள்ள வேலுச்சாமி கண்டிப்பாக எஸ்.பி வேலுமணியை பழி தீர்ப்பார் என நம்பிக்கையோடு இருப்பதாக தெரிகிறது. இதற்கேற்ப எஸ்.பி வேறுமணியின் ஆதரவாளர்களை அதிரடியாக காலி செய்தும் தனக்கு சாதகமாக உள்ளவர்களை தனது பக்கம் கொண்டு வரவும் செ.ம வேலுச்சாமி தீவிரம் காட்டி வருகிறார்.

குறிப்பாக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உள்பட 10 தொகுதிகளிலும் முக்கிய கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி மூலமாக பொறுப்பு பெற்று தருவதாக செ. வேலுச்சாமி உறுதி தந்துள்ளார். ஏற்கனவே எஸ் பி வேலுமணியின் ஆதரவாளர்களாக உள்ள சிலர், செ.ம வேலுச்சாமியிடம் தஞ்சமடைந்துள்ளனர்.

சிலர், கட்சி யார் கட்டுப்பாட்டில் வரும் எந்த பக்கம் விசுவாசம் கட்டுவது என தெரியாமல் தவித்து வருகின்றனர். தற்போது கட்சியின் முழு கட்டுபாடு எடப்பாடி பழனிச்சாமி வசம் இருக்கிறது. அவர் நீக்கம் செய்த நிர்வாகிகள் திரும்ப பதவியை பெற முடியாத சூழல் இருக்கிறது. கட்சி உடைந்தாலும் பொறுப்புகள், அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமி வசம் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக எஸ்.பி வேலுமணி கோவைக்கு வரவில்லை. அவர் சென்னையில் இருந்து கட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. அவருக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் சிலர் சென்னைக்கு சென்றுள்ளனர். ஆனால் கோவை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் எஸ்.பி வேலுமணிக்கு ஆதரவாக சென்னை செல்லவில்லை என கூறப்படுகிறது.

பொள்ளாச்சி ஜெயராமன், மேட்டுப்பாளையம் செல்வராஜ் உள்பட பலர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவில் உள்ளனர். ஆதரவு காட்டாதவர்கள் விரைவில் எடப்பாடி பழனிச்சாமி, செ.ம வேலுச்சாமி ஆதரவு வட்டத்தில் வந்து விடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கட்சி உடைந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான சூழல் ஏற்பட்டால் எஸ்.பி வேலுமணி தவெக சென்று விட வாய்ப்புள்ளது. அவரை சார்ந்தவர்களுக்கு தவெகவில் சேர வாய்ப்பு கிடைக்காது .

எனவே அதிமுக கட்சி தான் தேவை என பெரும்பாலானவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். எஸ்.பி வேலுமணி அவசரப்பட்டு குறிப்பிட்ட சிலருக்கு அமைச்சர், வாரிய தலைவர் பதவிக்காக கட்சியை உடைக்கும் செயலில் இருப்பதாக சோசியல் மீடியாக்களில் கருத்துக்கள் பகிரப்படுகிறது.

அவருக்கு எதிர்ப்பான தகவல்களை போடுகிறார்கள். இந்த சூழலால் எஸ்.பி வேலுமணி தரப்பு இறங்கு முகமாக இருக்கிறது. இனி அரசியலில் வேலுமணி சாதிக்க முடியாது. அவர் வேறு எந்த கட்சிக்கு போனாலும் ஓரங்கட்டப்படுவார்.

அதிமுகவில் இரு தரப்பு சமாதானம் ஆனாலும் எஸ்.பி வேலுமணிக்கு முந்தைய கட்சி பதவி கிடைக்க வாய்ப்பு குறைவு, அவரை சாந்தவர்களும் காலியாகி விடுவார்கள்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *