கோவையில் தேர்தல் செலவு ரூ.30 கோடி…
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்தல் பேப்பர்கள் பெறப்பட்டது. இது தவிர பல்வேறு பொருட்கள், விழிப்புணர்வுக்கான பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 3540 ஓட்டு சாவடிகள் தயார் செய்யப்பட்டது. தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டது.
அங்கே 300 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இரும்பு தடுப்புகள், கவுண்டிங் சென்டர் வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஸ்ட்ராங் ரூம் வடிவமைப்பு மற்றும் பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை மையம் கட்டமைப்பு, 3 ஆயிரம் அலுவலர்களுக்கு உணவு போன்றவற்றிக்காக 2.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
மாவட்ட அளவில் தேர்தல் பணியில் 24 ஆயிரம் அலுவலர்கள், போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கான சிறப்பு தொகை வழங்கப்படவேண்டியுள்ளது. மாவட்ட அளவில் சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு தேர்தல் வகையில் செலவு செய்யப்பட்டது.
தேர்தல் பிரிவினர் கூறுகையில், “300க்கும் மேற்பட்ட வாகனங்கள் தேர்தல் பணிக்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்டது. உள் கட்டமைப்பு, வாக்காளர்களின் வசதிக்காக பல்வேறு பணிகள் செய்யப்பட்டது.
தேர்தல் கமிஷன் மூலமாக பல்வேறு ஆவணங்கள், பொருட்கள் பெறப்பட்டது. தேர்தல் செலவின தொகை விரைவாக வரும் என எதிர்பார்க்கிறோம். பணி செய்த அலுவலர்களுக்கு அடுத்த மாதம் உரிய தொகை வந்து சேர்ந்து விடும், ” என்றனர்.
