சர்வர் மக்கர் மக்களுக்கு டார்ச்சர்…

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 3000 ரூபாய் வேட்டி சேலை ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வழங்கும் பணி கடந்த எட்டாம் தேதி முதல் நடக்கிறது.

இந்தப் பணியை முடக்கும் வகையில் ரேஷன் கடை ஸ்மார்ட் கருவிகள் சர்வர் தாமதம் ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு நியாய விலை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில் தனியார் நிறுவனம் சர்வரை சரியாக பராமரிக்கவில்லை. கடந்த ஆண்டும் இதேபோல் பிரச்சனை இருந்தது. இப்போதும் அதே பிரச்சனை. ஒரு நபருக்கு பரிசு வழங்குவதற்குள் 10 நிமிடம் ஆகிறது. அரசு இதை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கோவை திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சர்வர் தாமதம் காரணமாக பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *