ரேக்ளா வண்டியில் ஐஜி, எஸ்.பி ரவுண்ட்ஸ்
கோவை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் சார்பில் பொங்கல் விழா நேற்று நடந்தது . இதில் தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சரவண சுந்தர், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். கயிறு இழுக்கும் போட்டி , உறி அடிக்கும் போட்டி, மாட்டுவண்டி பயணம் என விழா அமர்க்கள படுத்தப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் காளை மாட்டு வாகனங்களில் ஏறி மைதானத்தில் வலம் வந்தனர். பொங்கல் வைத்து குடும்பத்தினருடன் கொண்டாடினர். இதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதேபோல் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் மாநகர் பகுதி போலீசார் பொங்கல் விழா கொண்டாடினர். ஓட்டப்பந்தயம் உறியடிக்கும் போட்டி, ஆடல் பாடல் என அமர்க்கள படுத்தப்பட்டது.
