கோவையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது…
கோவை சொக்கம்புதூர் ஐயப்பனார் வீதி பகுதியைச் சேர்ந்தவர் பாலன் (65). பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு அசோக் குமார் (35) மற்றும் சதீஷ் (30) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு ஈடுபடுவது வழக்கம்.
நேற்று அசோக் குமார் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் மது போதையில் வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகள் பேசி தகராறு ஈடுபட்டனர்
இதைப் பார்த்த பாலன் அவர்கள் இருவரையும் திட்டி சமாதானப்படுத்த முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அசோக்குமார் தந்தையை தகாத வார்த்தைகள் திட்டி சரமாரியாக அடித்து உதைத்தார் . பின்னர் வீட்டிலிருந்த கறி வெட்டும் கத்தியை அசோக் குமார் எடுத்து பாலனை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் பாலன் சரிந்து விழுந்தார் . அவரது சுத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர் . அதற்குள் பாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார் .
இது பற்றி தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து தந்தை பாலனை வெட்டிக் கொன்ற மகன் அசோக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
