ரோபோ உடன் ஓட்டு கேட்ட கோவை தவெக வேட்பாளர்…!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக செந்தில்குமார் போட்டியிடுகிறார்.

இவர் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட ரேஸ் கோர்ஸ் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தன்னுடன் ஐந்தடி உயரம் கொண்ட நடிகர் விஜய் போட்டோவுடன் கூடிய ரோபோ அழைத்து வந்திருந்தார். இந்த ரோபோ எந்திரன் சிட்டி ரோபோ போல் வேகமாக நடக்கிறது. வணக்கம் தெரிவித்தால் திரும்ப கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்கிறது.

பாதையில் யார் துணையின்றி தனியாக நடந்து செல்கிறது. ஆனால் அதனால் பேச முடியவில்லை . ஓட்டு கேட்க முடியவில்லை.
விஜய் கட்சி வேட்பாளர் இந்த ரோபோவை வாக்காளர் மத்தியில் கவர வைக்கும் வகையில் தினசரி வாடகைக்கு எடுத்து வந்திருப்பதாக தெரிகிறது.

கோவை நகரில் ஹோட்டல் ஒன்றில் இந்த ரோபோவை வரவேற்பு மற்றும் உணவு சப்ளைக்கு பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த ரோபோ வைரலானது. இதை தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்த செந்தில்குமார் முடிவு செய்து வாடகைக்கு வாங்கி வந்திருப்பதாக தெரிகிறது. இந்த ரோபோவுக்கான செலவு தேர்தல் செலவு கணக்கில் வரவு வைக்கப்படும் என தேர்தல் பிரிவினை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *