தரையில் படுத்து தர்ணா போராட்டம்
கோவில் பாளையம் கொண்டையம் பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்( 70 ) என்பவர் அளித்த புகார் மனுவில்
எனக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனத்தினர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் அளித்தோம் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் கலெக்டரை சந்தித்து புகார் தெரிவிக்கலாம் என வந்தேன். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எனது நிலத்தை எனக்கு மீட்டு தர வேண்டும் என்றார்.
தனது புகாருக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். நில அபகரிப்பு நடந்திருக்கிறது யாரும் தடுக்க முன்வரவில்லை நான் எத்தனை காலம் தான் இப்படியே போராடிக் கொண்டிருப்பது என அவர் போலீசார் உடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
