கோவையில் நடக்கும் பறக்கும் படை தூங்குதா..? மீட்டிங்கில் சிறப்பு பார்வையாளர் விசாரணை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தலைமையில் அனைத்து அமலாக்க முகமைகளின் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களுக்கான நடைமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.

இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், தேர்தல் பார்வையாளர்கள், கணக்கு பார்வையாளர்கள், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கட்சியினர் வழங்கினார்களா, இது தடுக்கப்பட்டதா, எந்த கட்சியினர் எந்த பொருட்களை மக்களுக்கு கொடுத்தார்கள், எங்கே எத்தனை முறை சென்று பறக்கும் படையினர் ஆய்வு செய்தார்கள்,

நடத்தை விதிகள் அமலாகி 20 நாட்களுக்கு மேலாகியும் ஏன் கட்சியினர் தவறுகளை தடுக்கவில்லை, பூத் கமிட்டி அலுவலகம், மற்ற பகுதிகளில் நடத்தை விதிகள் மீறல் தடுக்காமல் என்ன செய்தீர்கள் என கேட்டார். பல இடங்களில் பறக்கும் படை வாகனங்களை காணவில்லை.

சிலர் மர நிழலில் வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுப்பதாகவும், பல இடங்களில் பறக்கும் படை ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு முறையாக செல்லவில்லை என கூறப்படுகிறது. இதை ஏன் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் கவனிக்கவில்லை.

பொதுமக்களின் வாகனங்களை மட்டுமே ஏன் சோதனை செய்தீர்கள், கட்சிகாரர்கள், வேட்பாளர்கள் வாகனங்களை சோதனை செய்யவில்லையா என சிறப்பு பார்வையாளர் கேட்டார். மேலும் பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறதா, ஒட்டு பதிவுக்கு முந்தைய நாட்களுக்கு வழங்க பதுக்கி வைத்திருக்கிறார்களா,

உளவு தகவல்களை பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை சேகரித்துள்ளதா, போலீஸ் மூலமாக தகவல் வருகிறாதா பொது மக்களின் புகார்களை முறையாக வாங்கினீர்களா, அது தொடர்பான ரகசியம் காக்கப்படுகிறதா என விசாரித்தார். கோவை மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் பணிகள் நடக்கிறது.

எந்த விதிமுறை மீறலும் இல்லை என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர். நல்ல முறையில் சோதனை நடத்த வேண்டும், முறையாக பணி செய்தால் தான் தவறுகளை தடுக்க முடியும். வரும் நாட்களில் அலட்சியமாக இருக்க கூடாது என இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *