ஏன் குப்பை எடுக்கல.. இந்த 5 லட்ச ரூவா பைன்..

கோவை நகரில் பல இடங்களில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. தெருநாய்கள் , பெருச்சாளிகள் குப்பையை கிளறிக் கொண்டிருக்க மக்கள் தொடர்ந்து புகார் அளித்து புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

இன்று கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஜிவி ரெசிடென்சி , சவுரிபாளையம் பகுதியில் சுற்றிப் பார்த்தபோது ரோட்டோரம் குப்பை குவிந்து கிடந்தது . இது தொடர்பாக விசாரித்தவர் குப்பையை அகற்ற வேண்டிய தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு அதிரடியாக ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இங்கே மட்டும் இல்லை 100 வார்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குறையாத குப்பைமலைகள் இருப்பதாக மக்கள் தொடர்ந்து புகார் கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *