தீக்காடாக மாறிய காட்டூர்… அனலானது கோவை நகர்..!

கோவை காட்டூர் ராஜரத்தினம் வீதியில் மூன்று மாடி கட்டிடத்தில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை மற்றும் குடோன் உள்ளது. இன்று மாலை 4மணியளவில் கடையில் தீ பிடித்தது.

தீ மூன்று தளங்களுக்கும் பரவியது. அங்கே பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். அக்கம்பக்கத்து கடையில் இருந்தவர்களும் தீ மற்றும் புகையை பார்த்து உடனடியாக வெளியே வந்தனர் .

இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை கடையில் பேட்டரி மற்றும் ஆயில் இருந்தது பேட்டரிகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

நிலைமை எல்லை மீறி போனதால் ஏர்போர்ட் மற்றும் ஐ என் எஸ் அக்ராணியிலிருந்து தீயை அணைக்கும் நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இரவு 9.30 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயின் காரணமாக அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. கோவை நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீ விபத்து நடந்த பகுதிக்கு கூட்டமாக குவிந்தனர் .

அங்கே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர் . தீ பரவல் காட்சியை போட்டோ எடுக்க வீடியோ எடுக்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். மின் ஒயர் பழுது அல்லது அதிக வெப்பம் காரணமாக தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ பரவலுக்கான காரணம் குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீயின் காரணமாக அக்கம் பக்கத்திலிருந்து சில கடையிலும் சேதம் ஏற்பட்டது.

3 thoughts on “தீக்காடாக மாறிய காட்டூர்… அனலானது கோவை நகர்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *