கோவை மாவட்டத்தில் கல் குவாரிகளில் சோதனை நடத்த உத்தரவு…
கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை அலுவலகத்தில் கல்வாரிகள் கல் குவாரிகள் அளவீடு செய்வது தொடர்பான வீடியோ கான்ஃபரன்ஸ் மீட்டிங் இன்று நடந்தது.
இதில் கனிம வளம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. இதில் கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம வளங்கள் அளவு மற்றும் பரப்பு குறித்த விவரங்கள் சேகரிக்க வேண்டும்.
அரசுக்கு முறையாக ராயல்டி மற்றும் உரிய பசுமை வரி செலுத்தப்பட்டதா என கண்டறிந்து அதனை பெற வேண்டும் முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கல் குவாரி உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி சீல் வைக்க வேண்டும் . பல குவாரிகளில் கனிமம் எடுக்கும் அளவு முறைப்படுத்த வேண்டும். தினமும் எத்தனை லோடு கனிம பொருட்கள் சேகரிக்கப்படுகிறது.
கேரளா மாநிலத்திற்கு சப்ளை செய்யப்படும் கனிமங்கள் அளவு குறித்த விவரங்கள் ஒப்படைக்க வேண்டும். கிரசர்களை முறையாக செயல்படுத்த வேண்டும் . குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனை வளாகங்கள் அருகே கிரசர்கள் செயல்பட்டால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அனுமதி இல்லாத கிரசர்கள் தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் உத்தரவு வழங்கப்பட்டது.
