கோவை மாவட்டத்தில் எப். எல் 2 பார்கள் முறைகேடு தொடர்பாக ஆலோசனை

கோவை மாவட்டத்தில் எப்எல் 2 எப்எல்3 உரிமம் பெற்ற தனியார் பார்கள், ஹோட்டல், தங்கும் விடுதி பார் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

. இந்த கூட்டத்தில் கோவை மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் கோவிந்தராஜ், மாவட்ட கலால் துறை துணை கமிஷனர் முருகேசன் மற்றும் டாஸ்மாக், கலால் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் தனியார் மதுபான பார்கள் முறையாக நேர விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இரவு 11 மணிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. ஹோட்டல் லாட்ஜ்களில் உள்ள மதுபானங்களை உரிய நேரத்தில் மட்டுமே வழங்க வேண்டும். உரிய நேரத்துக்குள் பார்களை மூட வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மனமகிழ் மன்றங்கள் மற்றும் ஹோட்டல் லாட்ஜிகளில் தங்கி இருப்பர்கள் உரிய அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் வழங்க வேண்டும்.

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நடத்தப்படும் பார்களில் வெளி நபர்கள் மது வாங்குவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க வேண்டும். மதுபான பார்களை சுத்தமாக சகாதாரமாக பராமரிக்க வேண்டும். உணவுகள் தரமாக வழங்க வேண்டும். கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.

21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் வழங்க கூடாது என உத்தரவு வழங்கப்பட்டது. ஆதார் கார்டு கேட்டு மதுபானங்கள் வழங்கப்படுகிறது. இது வரவேற்க தக்கது என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *