காத்து கருப்பு அண்டாம காக்கும் சாமீ…..

குத்தம் செஞ்ச எங்க கருப்பு சும்மா விடாது. கையும் காலும் சுகமா இருக்க கருப்பு துணை நிற்கும் என கிராம மக்கள் நம்புகிறார்கள். கொங்கு மண்டல மாவட்டங்களில் கருப்பண்ணசாமி. கருப்பராயன், எல்லை கருப்பு சூல கருப்பு என கருப்புசாமிக்கு பல பெயர்கள் உண்டு. தமிழகத்தின் காவல் தெய்வமாக வணங்கப்படும் கருப்புசாமிக்கு கிராம கோயில்களில் முக்கிய இடம் உண்டு.

பெரும்பாலான கோயில்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கருப்பு சாமிக்கு நேர்த்தி கடன் செய்து பூஜிப்பது காலம் காலமாக நடக்கிறது. காத்து கருப்பு அண்டாம இருக்க, கெண்ட காலுக்கு கீழ கருப்புசாமி விபூதி, மை பூசணும் என கிராம மக்கள் கூறுவது வாடிக்கை. முறுக்கி விட்ட மீசை, கையில் அரிவாள், சூலாயுதம். இடுப்பில் கட்டிய கச்சை பிரமாண்டமான செருப்பு, உருண்டு திரண்டு மிரள வைக்கும் பார்வை என் கருப்புசாமியின் தோற்றம் கிராம கோயில்களில் சிறப்பு கவனம் பெறுகிறது. கருப்புசாமிக்கு சுண்டல், பொங்கல். கிழங்கு பொரி. கொய்யா படையல் வைத்து பூஜை நடத்தப்படுகிறது.

சேவல் அறுத்தும் கிடா வெட்டி பூஜை செய்வதும் பரவலாக நடக்கிறது. ரத்தம் சொட்ட சொட்ட பறவை விலங்கு பலி கொடுத்து உப்பு போடாமல் உணவு சமைத்து படையல் போடுவது கருப்புசாமி கோயில்களில் வாடிக்கையான விசயம். இரவில் படையல் வைத்து பூஜை முடித்து கோயிலை சாத்தி திரும்பி பார்க்காமல் சென்று விடவேண்டும் .கருப்புசாமி உணவை சாம்பிடும் நேரத்தில் மீண்டும் கோயிலுக்கு செல்லக்கூடாது .மீறினால் கருப்புசாமியின் கோபத்திற்கு ஆள நேரிடும் என கிராம மக்கள் பயபக்தி காட்டுவது வழக்கம். கொங்கு மண்டல மக்களின் காவல் தெய்வமான கருப்புசாமியின் மீதுள்ள பக்தியால் தங்கள் குழந்தைகளுக்கு கருப்புசாமி என பெயர் வைப்பதும் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *