பழங்கால சின்னங்களை வைத்து சர்வே துறையினர் ஆய்வு..
கோவை மாவட்ட நில அளவை துறை சார்பில் கோவை மாவட்டத்தில் நில அளவை வரலாற்று சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் உள்ள பகுதிகளில் கள ஆய்வுப் பணி நேற்று நடந்தது.
கோவை மாவட்ட நில அளவைத் துறை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில்
புதிதாக சர்வேயர்களாக பணியில் சேர்ந்த 64 பேர் கள ஆய்வு மற்றும் பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.
பெரிய முக்கோணவியல் நிலையம் , பெஞ்ச் மார்க் என அழைக்கப்படும் கடல் மட்ட உயர எல்லைப் பகுதி, கோர்ஸ் என்ற தொடர்ச்சியான எல்லை குறித்து இந்த பயிற்சியில் விளக்கம் தரப்பட்டது
கடந்த காலங்களில் கிராமங்களில் முச்சந்தி, இரு சந்தி புள்ளி வைத்து எல்லை கல் நட்டு நில அளவை பணி செய்யப்பட்டது. இதை வைத்து கிராமத்தின் எல்லைகள் முடிவு செய்யப்பட்டது.
இந்த அடையாளங்களை வைத்து எல்லைகளை அளவீடு செய்வது குறித்து சூலூர், வடபுதூர் பகுதியில் உள்ள அடையாள கற்களை வைத்து விளக்கம் தரப்பட்டது.
கிணத்துக்கடவு பொன்மலை முருகன் கோவிலில் பெரிய முக்கோணவியல் நிலையம், பெஞ்ச் மார்க் பகுதி உள்ளது. இங்கே இருந்து அளவீடு செய்யும் முறை குறித்து விளக்கம் தரப்பட்டது
1806 ம் ஆண்டில் கர்னல் வில்லியம் லோம்டன் நில அளவீடு செய்த பகுதியில் சர்வே துறையினர் ஆய்வு செய்தனர். பழங்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த குறியீடுகள் மற்றும் பழங்கால அளவீடு முறை குறித்து புதிய சர்வேயர்களுக்கு பயிற்சி தரப்பட்டது.
