கோவையில் லவ் ஜோடி டூயட், டாய்லெட்க்கு பூட்டு
கோவை உக்கடம் வாலங்குளத்தில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பூங்கா உள்ளது. இங்கே இரண்டு நாட்களுக்கு முன் காதல் ஜோடி ஜாலியாக பேசிக் கொண்டிருந்தது. செல்போனில் போட்டோ வீடியோ பார்த்து ஜாலியாக இருந்த இந்த ஜோடி திடீரென ஆண்கள் கழிவறையில் புகுந்தது.
அங்கே பாட்டு சத்தம் கேட்க இடையிடையே வேறு சத்தமும் கேட்டது. சந்தேகமடைந்த ஸ்மார்ட் சிட்டி பூங்கா செக்யூரிட்டி கதவை தட்டி விசாரித்தார். அப்போது ஆண்கள் கழிவறையில் இருந்து இளம்பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் எட்டிப் பார்த்தார்.
இதை அங்கே இருந்த வேறு சிலரும் பார்க்க பிரச்சனை ஏற்பட்டது. வாலிபரையும் இளம் பெண்ணையும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் இதேபோல் லீலைகள் பல இடங்களில் நடப்பதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து உல்லாச லீலை கழிவறைக்கு இன்று பூட்டு போடப்பட்டது .
