திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கும்.. அமைச்சர் கோவி செழியன் பேட்டி..
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் கோவை,திருப்பூர் கரூர் மாவட்டங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடந்தது .
இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கோவை மண்டல திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான செந்தில் பாலாஜி தலைமையில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து ஏராளமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது; திமுக எம்பி கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. மண்டல வாரியாக மாவட்ட வாரியாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு தொழில் பொதுநல அமைப்புகளிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
எழுத்துப்பூரவமாகவும் வாய்மொழியாகவும் பல்வேறு கோரிக்கைகளை கேட்டு அதை தலைமை கழகத்தில் தெரிவிக்க இருக்கிறோம். பொதுமக்கள் பொதுநல அமைப்புகள் மற்றும் பல்வேறு சங்கங்களிடம் பெறப்பட்ட மனுக்கள் தேர்தல்அறிக்கையாக தயார் செய்யப்பட்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு அறிக்கைகள் சட்டங்களாக திட்டங்களாக மாற்ற ஏற்பாடு செய்யப்படும்.
தமிழக முதல்வர் சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்து கொண்டிருக்கிறார். பொதுமக்கள் பொது நல அமைப்புகள் வர்த்தக சங்கத்தினர் தமிழக அரசை நம்பி வருகிறார்கள். திமுக அரசிடம் இதை தெரிவிக்கலாம் என நம்பி வருவதே திமுகவின் வெற்றியாக இருக்கிறது. மக்களின் ஆதரவு தேர்தல் அறிக்கை குழுவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
மூன்று மாவட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலாளர்கள் பிரச்சினை தெரிவிக்கப்பட்டது. து. கரூர் மாவட்டத்தில் தொழில் தேவைக்காக வளரும் கரூர் என்ற திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழில் ஜவுளி மற்றும் கொசுவலை தொழில் போன்றவற்றை மேம்படுத்த கோரிக்கை வைத்தார்கள்.
அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கோவை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இருக்கிறார். ஜவுளி சாயப்பட்டறை உள்பட பல்வேறு தொழில்களுக்கான கோரிக்கைகள் பெறப்பட்டிருக்கிறது.
மூன்று மாவட்டங்களில் கோரிக்கைகள் தேர்தல் அறிக்கைகளாக தயார் செய்யப்பட்டு திமுக ஆட்சி அமைந்ததும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
தேர்தல் அறிக்கை திமுக-வின் கதாநாயகன். இந்த திமுகவின் சாதனையை முறியடிக்கும் என்ற வகையில் வரும் தேர்தல் அறிக்கை இருக்கும் ஏற்கனவே தமிழகத்தில் பத்து ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள் திமுகவின் சாதனைகளை செய்திருப்பார்களா என்பது அவர்களுக்கு தெரியும். 60 வயது கடந்தவர்களுக்கு இலவச பஸ் பயணம் என அதிமுக சொன்னது. ஆனால் செய்யவில்லை.
தேர்தல் நேரத்தில் தெரிவித்ததை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். ஒன்றிய அரசு தொடர்பான கோரிக்கைகள் நிறைவேறாமல் இருந்தால் அதற்கு ஒன்றிய அரசுதான் காரணம்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் கொடுத்து அதை நிறைவேற திமுக உறுதுணையாக இருக்கும். பல்கலைக்கழக மாணவர்களின் தரத்தை குறைவாக மதிப்பிட்டு தமிழக ஆளுநர் ஆர். என் ரவி தொடர்ந்து பேசி வருகிறார்.
அறிக்கை தருகிறார் செய்தி தருகிறார். உயர்ந்த நிலையில் உயர்கல்வித்துறை இருக்கிறது. இது புரியாமல் அவர் பேசி வருகிறார். இது கேலிக்கூத்தாக இருக்கிறது. தமிழக சட்டமன்றத்திற்கு என சில மரபுகள் மாண்புகள் இருக்கிறது இதை குழி தோண்டி புதைக்கும் வகையில் ஆளுநர் உரையை படிக்காமலேயே புறக்கணித்து செல்வது வேடிக்கையானது.
, தமிழக மாணவர்களின் தரத்தை குறைத்து பேசி வருவதாலும் சட்டமன்றத்தில் மாண்பை குறைக்கும் வகையில் அவர் செயல்பட்டதாலும் அவர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் நான் பங்கேற்காமல் புறக்கணித்தேன் அவர் மாணவர்களை மதிக்கட்டும் சட்டமன்ற மாண்புகளை மதிக்கட்டும் அதன் பிறகு அவர் பங்கேற்கும் விழாவில் நான் கலந்து பங்கேற்பது தொடர்பாக யோசிக்கிறேன்.
