கோவையில் லாட்ஜ், மண்டபங்கள் விவரங்கள் பெற தேர்தல் பிரிவுக்கு உத்தரவு..!
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தங்கும் விடுதி, ஹோட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட், பார்ட்டி ஹால், திருமண மண் பங்கள் மற்றும் பல்வேறு வாடகை கட்டடங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் செயல்பாடுகளை முன் கூட்டியே துவக்கி விட்டனர் குறிப்பாக அரசியல் கட்சியினர் தேர்தல் பாணிக்காக கட்டடங்களை பயன்படுத்தவுள்ளனர். தற்போது மாவட்ட அளவில் பூத் கமிட்டி, தேர்தல் அலுவலகம் பல இடங்களில் துவக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கூடுதல் கட்டடங்களை அவர்கள் தேர்தல் பணிக்காக பயன்படுத்தவுள்ளனர். வாடகை கட்டங்களை பயன்படுத்தினால் அது தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபம் பார்ட்டி ஹால் விடுதிகள், லாட்ஜ் போன்றவற்றின் வாடகை விவரங்களை தேர்தல் பிரிவு வசம் ஒப்படைக்க வேண்டும்.
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தற்போது ஏதாவது அரசியல் கட்சியினர் ஹோட்டல் லாட்ஜ் பார்ட்டி ஹால் போன்றவற்றை புக்கிங் செய்திருந்தால் அந்த விபரங்களை ஒப்படைக்க வேண்டும்.
தேர்தல் பிரிவில் தெரிவிக்காமல் நடத்தை விதிகள் பயன்பாட்டிற்கு வரும் போது கட்டடங்களை வாடகைக்கு ஒப்படைத்தால் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வாடகைக்கு விவரங்கள் கேட்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வரும்போது வாடகை கட்டட விவரங்கள் முழுமையாக அமலாக்கப்படும்.
அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் ரீதியாக கட்டடங்களை வாடகை அடிப்படையில் பெற விரும்புவோர் விவரங்களை பெற வேண்டும். கட்டடங்களில் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு அனுமதிக்க கூடாது. பணம், பரிசு பொருள் போன்றவற்றை பதுக்கி வைப்பதற்காக வாடகை கட்டடங்களை பயன்படுத்தக் கூடாது. மீறி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தேர்தல் கமிஷன் மூலமாக உரிய முறையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
