மனைவி பிரிவு ,போதை கொடுமை கோவை வாலிபர் தற்கொலை..!

கோவை
வெள்ளலூர் அருகே உள்ள சக்தி விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபினந்த் ( 43). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார்.


இந்த நிலையில் அபினந்த் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் இருப்பவர்கள் அவரது சகோதரர் எழிலனுக்கு தகவல் தெரிவித்தனர். 
போத்தனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அபினந்த் இருந்த வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. 

கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் அழுகிய நிலையில் அபினந்த் இறந்து கிடந்தார். இவர் ஐந்து நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

தீவிர மது பழக்கம் உள்ள அபினந்த் மனைவி உடன் வாழாமல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துசென்று விட்டார். அதன் பிறகு தனியார் மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை பெற்று வந்தார். அப்போதும் அவரால் போதையில் இருந்து மீள முடியவில்லை .

இதனால் விரக்தியில் காணப்பட்ட அபிநந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து விடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *