திமுக கூட்டணியில் நாளை பேச்சு வார்த்தை:கொமதேக ஈஸ்வரன் தகவல்..

கோவை கொடிசியாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது, “திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தொகுதி பேச்சுவார்த்தைக்காக நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை அங்கு செல்கிறோம்.

அதிக கட்சிகள் இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கான சீட்கள் குறையும் என்று தகவல்கள் வெளியானது குறித்த கேள்விக்கு, “திமுகவினர் அவ்வாறு கூறியது போன்று தெரியவில்லை. எவ்வளவு தொகுதிகள் கேட்போம் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டு அறிவிக்கிறோம்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்தான கேள்விக்கு, நிலையான அரசு முக்கியம். அது இல்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாது. ஒரு கட்சி ஆட்சியாக இருந்தால்தான் நிலையான ஆட்சியை தர முடியும் வளர்ச்சி என்பது தான் முக்கியம், மற்ற எண்ணங்கள் தான்

இருக்கக் கூடாது. கூட்டணி ஆட்சி என்பதற்கு அதிமுகவின் பலவீனம் காரணம் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, அதை அப்படி கூற முடியாது அந்தந்த தேர்தலில் போது இந்த வார்த்தை வரக்கூடும். புதிய கட்சிகள் வருவதால் இந்த வார்த்தை தற்போது அதிகமாக பேசப்படுகிறது

அனைவரையும் பங்காளிகள் ஆக்கிக் கொள்வேன் என்பதால், தற்போது இது அதிகமாக பேசப்படுகிறது

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்தான கேள்விக்கு, எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக வாக்குறுதிகளை கொடுப்பார்கள். இந்த ஆட்சியால் மக்கள் எந்த அளவு பயனடைந்துள்ளார்கள். அதனை தெரிந்து கொண்டு அதே வழியில் எதையாவது அறிவிக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்கள்.

தற்பொழுது கூட எங்கள் கூட்டணியில் ஐந்தாயிரம் ரூபாய் மகளிருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் தேர்தலின் போது தெரிவிக்கவில்லை. கடந்த தேர்தலில் கூறியதை அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம்.

எனவே எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என பதிலளித்தார். கல்லாப்பெட்டி கட்சி என்று பலரும் விமர்சிப்பது குறித்தான கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் அனைவரும் இதுபோன்று பேசுவது தான். அவர்கள் மீது உள்ள தவறுகள் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி பேசுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *