கோவையில் கைதியை தப்ப வைத்த போலீஸ்காரர் கைது: 3 போலீசார் சஸ்பெண்ட்

பிம்முடு அஜித் குமார்..

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிம்முடு அஜித்குமார் (27). மோசடி நபர் ஆன இவர் தமிழகம் ஆந்திர மாநிலங்களில் கார் விற்பனை மற்றும் பல்வேறு தொழில் தொடர்பாக மோசடி செய்து ஏமாற்றியது தொடர்பாக இவர் மீது வழக்கு இருக்கிறது.

திருப்பூரில் நடந்த மோதல் விவகாரத்தில் பிம்முடு அஜித் குமார் கைது செய்யப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இவரை அங்கே கைதிகள் வார்டில் பணியில் இருந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த போலீஸ்காரர் சேக் முகமது ரோஷன் (23) என்பவர் உதவி செய்வதாக கூறினார்.

அவரின் செல்போன் வாங்கி பேசிய அஜித்குமார் தனது நண்பர் மூலமாக சேக் முகமது ரோஷனுக்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் ஜி பே மூலம் பெற்று கொடுத்தார். இதை தொடர்ந்து அஜித்குமாரை அவர் கழிவறை வழியாக தப்பி செல்வதற்கு உதவி செய்தார் .ஆட்டோ மூலமாக சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று அஜித்குமார் தங்கி உள்ளார் .

பின்னர் தனது நண்பர் விஜயகுமார் என்பவரை வரவழைத்து இருவரும் ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் ஓமலூர் அருகே டீக்கடையில் டீ குடித்த போது கோவை தனிப்படை போலீசார் இரண்டு பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஷேக் முகமது ரோஷன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் பணியில் இருந்த போது அலட்சியமாக செயல்பட்ட போலீஸ்காரர்கள் பாரதிதாசன் ,விஜயகுமார் மற்றும் பெரியசாமி ஆகியோரை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *