கோவையில் வந்தாச்சு பாம்பு மீட்பு படை..!
கோவை நகரில் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாம்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகமாகி விட்டது. வீடுகளில் பாம்பு புகுந்து விட்டதாக பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர் .
சில நேரங்களில் தீயணைப்புத் துறையினர் வர தாமதம் ஏற்படுகிறது .மேலும் பல்வேறு இடங்களில் பாம்புகள் நடமாட்டத்தினால் பொதுமக்கள் வீடுகளில் வசிக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையை தவிர்க்க தன்னார்வ அமைப்பினர் உதவியும் மூலமாக கோவையை சேர்ந்த அமீன், விக்னேஷ் ஆகியோருக்கு இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாம்பு பிடிப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த பாம்பு மீட்பு படையினருக்கு தேவையான கருவிகளும் வழங்கப்பட்டிருக்கிறது . பொதுமக்கள் பாம்பு மீட்பு படையின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக அவர்கள் அந்த இடத்திற்கு சென்று பாம்பை பத்திரமாக மீட்பார்கள்.
