கோவை மாவட்டத்தில் 100% ஓட்டுப்பதிவு சாத்தியமா…!?
கோவை மாவட்டத்தில் 27.12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.
வரும் 3ம் தேதி மாவட்டத்தில் ஓட்டு பதிவு நடக்க உள்ளது. தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்குப்பதிவு என்பதை வலியுறுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறது. மாவட்ட அளவில் ஹாரன் பில் பறவை தோற்றத்தில் ‘ஓட்டு வீரன்’ என்ற லோகோ உருவாக்கப்பட்டு பொது இடங்கள், கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் நடந்தது. இதில் 6.50 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போதுள்ள இறுதி வாக்காளர் பட்டியல கோவையில் வசிக்கும் நிரந்தர வாக்காளர்கள் என்ற அளவில் உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த வாக்காளர்களின் சிலர் வெளியூரில் பணி செய்வதாக தெரிகிறது. குறிப்பாக கோவை வாக்காளர்கள் திருப்பூர், ஈரோடு, சேலம் செனனை போன்ற நகரங்களில் பணி செய்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக ஜார்கண்ட், பீகார், ஒடிசா மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள்.
இதேபோல் வட மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கோவை மாவட்டத்தில் வசிக்கிறார்கள்.
கோவையில் வாக்காளர்களாக ஓட்டுரிமை உள்ள அனைவரும், கோவையில் ஓட்டு போட வேண்டும். இதேபோல் வெளியூரில் ஓட்டுரிமை உள்ளவர்கள் அந்தந்த ஊருக்கு செல்ல வேண்டும். ஆனால் இப்போதுள்ள சூழலில் அது சாத்தியமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
ஒட்டு பதிவு நாளில் ஒரு நாள் மட்டும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சொந்த ஊர் சென்று ஓட்டு போட்டு திரும்ப வர முடியுமா, கோவையில் ஒட்டு போட வேண்டியவர்கள் கட்டாயம் வருவார்களா வெளியூர் வெளி மாநிலத்திலிருந்து கோவைக்காரர்கள் வருவார்களாக என தேர்தல் பிரிவினர் எதிர்பார்த்துள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல் பிரிவினர கூறுகையில், “சொந்த ஊரில் ஓட்டுரிமை உள்ளவர்கள் ஓட்டுப்பதிவு தினத்தில் அவர்கள் ஊருக்கு செல்ல வேண்டும் குறிப்பாக திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி தாத்துக்குடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் ஓட்டுப்பதிவு நாளில் சொந்த ஊர் சென்று ஓட்டு போட முன் வரவேண்டும்.
அதேபோல் கோவையை கோவையில் ஓட்டுரிமை உள்ளவர்கள் வெளியூரில் இருந்து கோவை வந்து ஓட்டு போடுவார்கள் என்ற எதிர்பார்க்கிறோம். கோவை மாவட்டத்தில் சுமார் மூன்று லட்சய வாக்காளர்கள் வெளியூரில் இருக்கலாம். இவர்கள் வருகையை எதிரபார்த்து இருக்கிறோம்.
சொந்த முகவரியில் வாக்காளர் படிவம் வழங்கப்பட்டிருப்பதால், இவர்கள் வேறு மாவட்டத்தில் இருந்தால் அங்கேயிருந்து ஓட்டு போட வழியில்லை. வாக்காளர்கள் கட்டாயம் வர வேண்டும். 100 சதவீதம் ஓட்டு பதிவு நடந்தால் மட்டுமே உண்மையான ஜன்றாயகம் சிறப்பாக அரங்கேறும், வாக்காளர்களுக்கு தங்களது வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் பற்றி தெரிவதில்லை.
இதற்காக தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் தேரதலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை வெளியிடுகிறோம். வேட்பாளர்களின் விவரங்களை படித்து பார்த்து தெளிவாகி ஓட்டு போடலாம், என்றனர்.
