கோவையில் மேஸ்திரி கள்ளக்காதலியுடன் ஓட்டம்: மனைவி புகார்
கோவை சிங்காநல்லூர் நீலி கோணம் பாளையம் பகுதியை சேர்ந்த 38 வயதான கட்டிட மேஸ்திரி ஒருவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மேஸ்திரிக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது . தனது மனைவியை மற்றும் குழந்தைகளின் நகை மற்றும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து அதனை கள்ளக்காதலிக்கு செலவு செய்து அவர் ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் இவரது மனைவி வீட்டில் இருந்த பொருட்களை காணவில்லை. மகளுக்கு சீர் செய்ய வைத்திருந்த நகைகளை காணவில்லை. பீரோவில் இருந்த பணமும் இல்லை என தனது கணவரிடம் கேட்டுள்ளார்.
அவர் அதற்கு சரியாக பதில் தராமல் நகை பணம் வந்துவிடும் எனக் கூறி சமாளித்துள்ளார்.
இந்த நிலையில் அவரது கள்ளக்காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்து விட்டது. இதைத்தொடர்ந்து மேஸ்திரி மனைவி கடும் கோபம் அடைந்தார்.
கள்ளக்காதலிக்கு கொடுத்த நகை பணம் அனைத்தும் வீட்டுக்கு வரவேண்டும். உடனே வாங்கி வா என எச்சரித்து அனுப்பி வைத்தார். இது தொடர்ந்து வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற மேஸ்திரி திரும்ப வீட்டுக்கு வரவில்லை.
அவர் தனது கள்ளக்காதலியுடன் மாயமாகி விட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக மேஸ்திரி மனைவி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கணவரை தேடி வருகிறார்.
