கோவை திமுக நிர்வாகிகள் விருப்ப மனு

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிட அந்த கட்சி நிர்வாகிகள் சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மாணவர் அணி நிர்வாகி ராஜீவ் காந்தி விருப்ப மனு அளித்துள்ளார். இதேபோல் கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் விருப்ப மனு அளித்துள்ளார்.

ஏற்கனவே இதே தொகுதிக்கு முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் விருப்ப மனு அளித்திருந்தார். கோவை மாவட்டத்தின் இதர தொகுதிகளில் போட்டியிட கட்சியின் நிர்வாகிகள் பலர் போட்டி போட்டு மனு அளித்து வருகின்றனர். யாருக்கு தலைமை கழகம் சீட்டு ஒதுங்கி தரும் என விரைவில் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *