85 வயசுக்கு மேல் வீட்டில் இருந்தே ஓட்டு: கோவையில் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு
கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் தொடர்பாக கோவை, திருப்பூர் நீலகிரி, ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவவர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடந்தது.
இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், 30க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஆர்ஓ , ஏஆர்ஓ மற்றும் தேர்தல் பணி அலுவலர்களுக்கு மாஸ்டர் டிரைனர் மூலமாக பயிற்சி தரப்பட்டது.
இதில் சட்டமன்ற தேர்தல் கடந்த காலங்களை போல் அல்லாமல் மிக நுட்பமாக இருக்கும். அனைத்து செயல்பாடுகளையும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள், அப்சர்வர்கள் கண்காணிப்பாளர்கள் செலவு கணக்கு துல்லியமாக கண்டறிய வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீற அனுமதிக்க கூடாது.
பறக்கும் படைகளை மிக சரியாக கையாள வேண்டும். பணம், பரிசு பொருட்கள் வினியோகம் தடுக்க வேண்டும். இதற்காக தேர்தல் கமிஷனில் பிரத்யேக செயலிகள் இருக்கிறது. இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தகவல் பெற வேண்டும்.
ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல், பரிசீலனை சரியான விதிகளின் படி நடக்க வேண்டும் குற்ற பின்னணி வேட்பாளர்கள் விவரங்களை கண்டறிய வேண்டும் ஓட்டு பதிவு நாளில் உரிய கட்டுபாடுகளை கடை பிடிக்க வேண்டும்.
ஓட்டு மெசின்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். தங்கள் கட்டுபாட்டில் உள்ள ஓட்டு சாவடிகள் ஒட்டு பதிவு விவரங்களை தெரிந்து வைக்க வேண்டும் அமைதியாக எவ்வித முரண்பாடும் இல்லாத வகையில் தேர்தல் பணி நடத்த வேண்டும்.
நடத்தை விதிகளின் படி அனைத்து பணிகளும் நடத்தி முடிக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
85 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு பதிவு செய்ய முடியும். இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இந்த கூட்டத்தில் பிரத்யேக உத்தரவு வழங்கப்பட்டது.
