கோவையில் 2353 கிலோ குட்கா அழிப்பு
கோவை கருமத்தம்பட்டி போலீஸ் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு குட்கா பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவற்றை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் தீ வைத்து இன்று அழித்தனர். 2353 கிலோ எடையிலான இந்த போதை பொருட்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே கடந்த மாதம் செட்டிபாளையம் பகுதியில் 2000 கிலோவுக்கும் அதிகமாக கஞ்சா தனியார் நிறுவன பார்லரில் அழிக்கப்பட்டது.
போலீசார் கூறுகையில் போதை பாக்கு பான் மசாலா பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கோவைக்கு கடத்தி பெறப்படுகிறது. இவற்றை மாவட்ட எல்லை செக் போஸ்ட் பகுதியில் தடுக்க வேண்டி உள்ளது. கடைகளில் ரகசியமாக வைத்து இவற்றை விற்பனை செய்தார்கள். பல இடங்களில் சோதனை நடத்தியும் தொடர்ந்து போதை பாக்கு விற்பனை இருக்கிறது, ” என்றனர்.
