கோவையில் மாரியம்மன் சிலை உடைப்பால் பரபரப்பு..
கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் மாரியம்மன் மற்றும் முனியப்பன் கோயில் உள்ளது. இன்று அந்த கோயிலில் மாரியம்மன் முனியப்பன் சிலை சேதம் செய்யப்பட்டிருந்தது.
சுவாமி முகத்தில் மர்ம நபர்கள் சேதம் ஏற்படுத்தி இருந்தனர். இதே போல் கோயில் வளாகத்தில் இருந்த சூலம் சாய்க்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் பாபா கிருஷ்ணன் , செய்தி தொடர்பாளர் தனபால், குனியமுத்தூர் பகுதி பொறுப்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் அங்கே சென்று பார்வையிட்டனர்.
இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மர்ம நபர்கள் கோயில் சிலையை உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவை வைத்து போலீசார் சுவாமி சிலைகளை சேதம் செய்த நபர்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
