கோவையில் மசாஜ் சென்டரில் நள்ளிரவில் தீ


கோவை சுங்கம் பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வந்தது. இன்று நள்ளிரவு இந்த மசாஜ் சென்டரில் திடீரென தீப்பிடித்தது.

தீ பக்கத்தில் உள்ள கட்டடங்களுக்கு பரவும் நிலைமை இருந்தது. இது தொடர்பாக கோவை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .

சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின் ஒயர் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மசாஜ் சென்டரில் இருந்த பொருட்கள் படுக்கை மற்றும் பல்வேறு அலங்கார பொருட்கள் எரிந்து நாசமானது.

இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மசாஜ் சென்டர் முறையாக அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறதா அதில் விதிமுறை மீறல் உள்ளதா எனவும் விசாரணை நடக்கிறது.

மசாஜ் சென்டர் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மசாஜ் சென்டரில் இருந்த ஆண் , பெண்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டார்கள். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *