கஞ்சா கடத்தல் வட மாநில பெண் கைது
கோவை கருமத்தம்பட்டி வேட்டைக்காரன் குட்டை பிரிவு பகுதியில் கருமத்தம்பட்டி போலீஸ் சார் சோதனை நடத்திய போது அங்கே சந்தேகப்படும் வகையில் பெண் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார் .
அவரிடம் சோதனை செய்தபோது பிளாஸ்டிக் கவரில் 10 கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்தனர்.
அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த இஸ் மேதரா காதும் (26) என தெரிய வந்தது. அவர் சொந்த ஊரிலிருந்து கஞ்சா வாங்கி வந்து அதை கோவை கருமத்தம்பட்டி நீலாம்பூர் கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்தது.
மேலும் கஞ்சா விற்பனையில் இவரிடம் தொடர்பில் உள்ள நபர்கள் குறித்து போலீசார விசாரித்து வருகின்றனர்.
