கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கட்டுப்பாட்டு அறை திறப்பு..

கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட இடிகரை, நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் டவுன் பகுதி, திருமலைநாயக்கன்பாளையம், சாமிசெட்டிப்பாளையம்,

கூ.கவுண்டம்பாளையம், கோவனூர், பாலமலை, 4 வீரபாண்டி சாமநாயக்கன்பாளையம், மத்தம்பாளையம், ஒன்னிப்பாளையம், காளிப்பாளையம் மற்றும் தொட்டிப்பாளையம் பகுதிகளில் 236 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

இந்த கேமராக்கள் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் இன்று துவக்கி வைத்தார்.

கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், குமாரபுரம் முதல் பெட்டதாபுரம் வரை உள்ள முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து மற்றும் குற்றச்செயல்களை கண்காணிக்கும் பொருட்டு 60 கேமராக்கள், வாகன எண்களை துல்லியமாக பதிவு செய்யும் 6 ஏஎன்பிஆர் கேமராக்கள் நிறுவப்பட்டது,

மண் திருட்டு மற்றும் பல்வேறு சட்டவிரோத செயல்களை கண்காணிக்கும் வகையில் 20 கேமராக்கள் அமைக்கப்பட்டது.

பொதுமக்களும் தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சுமார் 1,500 கேமராக்களை அமைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *