கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்..!
தமிழக சட்டமன்றத்திற்கு இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் (model code of contact) உடனடியாக அமலுக்கு வந்தது
கோவை மாவட்ட அளவில் ஏற்கனவே பறக்கும் படை நிலையான கண்காணிப்பு படை வீடியோ கண்காணிப்பு படை என 90 படைகள் உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 720 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணி முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பவன் குமார் சிங்காநல்லூர் சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு திடீர் ஆய்வு நடத்தினார்.
பல்வேறு இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு பொதுமக்களின் உடைமைகள் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. ஐம்பதாயிரம் ரூபாய் வரை இருந்தால் மட்டும் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படும். அதற்கு மேல் பணம் இருந்தால் அதற்குரிய ஆவணங்களை காட்ட வேண்டும் பொருட்கள் ஏதாவது வைத்திருந்தால் அது வாங்கியதற்கான ரசீது ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அவற்றை பறிமுதல் செய்ய தேர்தல் பிரிவுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. பறக்கும் படை மட்டும் இன்றி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் தயார் செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தேர்தல் விதிமீறல் தொடர்பாக சிவிஜில் உள்பட பல்வேறு செயலி மூலமாக புகார் தெரிவிக்கலாம்.
தேர்தல் நடத்தை விதி காரணமாக அதிகாரப்பதிவியில் இருப்பவர்கள் குறிப்பாக மேயர், நகராட்சி தலைவர்கள் தங்களது அலுவலக அறை
இனி பயன்படுத்த முடியாது அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அரசு சார்பில் வழங்கப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
