690 கிலோ குட்கா பதுக்கியவர் கைது

கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் தெலுங்கு வீதியில் இன்று வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்,

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீசார், அவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர்.

அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர், தெலுங்கு வீதியை சேர்ந்த பிரகாஷ் (29) என்பதும், அதே பகுதியில் கடை வைத்து குட்கா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரது கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 690 கிலோ எடையில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, வெரைட்டி ஹால் ரோடு போலீசார் கடையில் இருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.

மேலும், விசாரணையில் பிரகாஷ் குட்காவை பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் பிரகாஷ் மீது வழக்கு பதிந்து கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *