பணம் பரிசுப் பொருள் பறிமுதல் செய்வோம்.. கோவை கலெக்டர் பேட்டி..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 27,14,676 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 13,08,898 ஆண் வாக்காளர்கள் 14,05,246 பெண் வாக்காளர்கள் 532 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் மற்றும் 8 துணை ஓட்டு சாவடிகள் என 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

16,992 தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் வேட்டு மனு தாக்கல் செய்வதற்கு சட்டமன்ற தொகுதி வாரியாக அலுவலகங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. வேட்பாளர்கள் அந்த அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை பணம் பரிசு பொருட்கள் தொடர்பான புகார்களை சி விஜில் செயலி மூலமாக ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம் .ஸஇது தொடர்பாக 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர்கள் பொதுமக்கள் புகார்கள் தெரிவித்தால் அவர்கள் தொடர்பான விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

பரிசு பொருட்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அளவில் 182 பதட்டமான ஓட்டு சாவடிகள் இருக்கிறது. தினமும் பறக்கும் படை மற்றும் பல்வேறு படைப்பிரிவினர்கள் சோதனை நடத்துவார்கள் இதில் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் 24 மணி நேரத்தில் முறையாக வெளியிடப்படும்.

போலியான தகவல் பதட்டம் ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை சோசியல் மீடியாக்களில் வெளி வராமல் தடுக்க தேவையான கண்காணிப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து பரிசு பொருட்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள் என்பது தொடர்பான புகாருக்கு

அது போன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட கட்சி மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்போம். இதுவரை அது தொடர்பாக புகார் வரவில்லை என்றனர்.

கடந்த தேர்தலில் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது இதில் 34 வழக்குகள் தற்போது விசாரணை அளவில் இருக்கிறது. மாவட்ட எல்லையில் 13 செக் போஸ்ட்கள் இருக்கிறது. அங்கே தொடர்ந்து கண்காணிப்பு பணி நடக்கிறது .
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். பேட்டியின் போது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் ,மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் தேவநாதன்,
கார்த்திகேயன் உள்பட பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *