கோவை ஜிசிடி ஓட்டு எண்ணிக்கை மையம் தயாராகிறது…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது.

இதில் மாவட்ட அளவில் 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஒட்டு எண்ணிக்கை மையம் (கவுண்டிங் சென்டர்) தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது

. இதன்படி, கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஒட்டு எண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்படும். இதற்கு அருகே 10 இடங்களில் பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரூம்) அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எண்ணிக்கை மையத்தில் 15 முதல் 22 ரவுண்ட் டேபிள் அமைக்க மின் விளக்கு மற்றும் பிளக் பாயிண்ட் வசதிகளுடன் தடுப்பு பகுதிகள், கண்காணிப்பு கேமரா குடிநீர், கழிவறை வசதிகள் அமைக்கும் பணி நடக்கிறது.

எண்ணிக்கை மையம், ஸ்டிராங்க ரூம் தொடர்பான விவரங்கள் வரைப்படங்கள் தயாரித்து அதை அந்த வளாகத்தின் முன் ஒட்டி வைக்கும் பணியும் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மையங்கள் கடந்த காலங்களில் இருந்ததை போல் அமைக்கப்படவுள்ளது.

வேட்பாளர்கள் ஏஜன்டுகள் ஒட்டு மெசின்கள் உள்ள அறைகளை கண்காணிப்பு கேமராவில் பார்க்க வசதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் எலி தொல்லை, மின் தடையால் ஒட்டு மெசின் அறைகள் கண்காணிப்பு காட்சிகளை சில நிமிட நேரம் பார்க்க முடியாத சூழல் இருந்தது.

தற்போது அதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்க தேவையான வசதிகள் செய்யப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர் ஓட்டு பதிவு முடிந்த பின்னர், மெசின்களை பாதுகாப்பாக அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டிய நிலையிருக்காது இருந்தாலும் கூடுதல் திட்டங்களை மேற்கொள்ள தேர்தல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் பிரிவினர் கூறுகையில், “ கல்லூரியில் தேர்வு நடக்கவுள்ளது. இதனால் மொத்தமாக கட்டுபாட்டில் எடுக்க முடியவில்லை. தொகுதி வாரியாக வளாகம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது 30ம் தேதிக்கு பிறகு தேர்தல் பிரிவின் கட்டுபாட்டில் கொண்டு வரப்படும்.

ஓட்டு எண்ணிக்கை நாளில் மெகா ஸ்கிரீன் அமைக்கப்படும் ஒட்டு பதிவு நாளில், மெசின்களை கொண்டு வந்து ஸ்டிராங்க் ரூமில் வைக்க, இடவசதி இருக்கிறது. வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டு எண்ணிக்கை நாளில் பல ஆயிரம் பேர் இந்த வளாகத்தில் குவிவார்கள். அதற்கேற்ப பாதுகாப்பு திட்டங்கள், காத்திருப்பு கூடங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *