கோவை மாவட்டத்தில் இன்று 19115 ஓட்டு மெஷின்கள் தொகுதி வாரியாக தேர்வு
கோவை மாவட்டத்தில் 10 சட்ட மன்ற தொகுதிகளில் 3571 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இவற்றில்
8,343 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்), 5200 கட்டுப்பாட்டு மெசின்கள் (கன்ட்ரோல் யூனிட்), 55/2 சின்னம் காட்டும் மெசின்கள் (விவி பேட்) என மொத்தம் 19,115 மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த மெசின்கள், தெற்கு தாலூகா அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் கமிஷன் பாதுகாப்பு குடோனில் இருந்து சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து ஒப்படைக்கப்படும்.
அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான தாலூகா அலுவலகத்தில் இந்த மெசின்கள் வைக்கப்படும். எந்த மெசின் எந்த தொகுதிக்கு வழங்குவது என கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த ஓட்டு மெஷின்கள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டது.
இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆன்லைன் முறையிலான ரேண்டமைசேஷன் செய்து எந்த தொகுதிக்கு எந்த ஓட்டு மிஷின்கள் என தேர்வு செய்யப்பட்டது. இந்த மிஷின்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
