ஓட்டு போட ராட்சத பலூனில் விழிப்புணர்வு..

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு பதிவு நடக்கவுள்ளது.

வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டு போட வலியுறுத்தி மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பவன்குமார் வாகனத்தை துவக்கி வைத்தார்.

இந்த வாகனம் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று, வாக்காளர் விழிப்புணர்வு குறித்த தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும்.

பார்முலா கார் ரேசர் நரேன் கார்த்திகேயன், கோவை மாவட்டத்தின் பிரதிநிதியாக ஓட்டு போட கோரிக்கை விடுக்கும் விளம்பரம் சேர்க்கப்பட்டிருந்தது. மேலும் செட்டிபாளையத்தில் பாரா கிளைடிங் மூலமாக ராட்சத பலூன் பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *