தேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை
பைல் படம்
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது.
3563 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் தலைமை ஒட்டுச்சாவடி அலுவலர், இரண்டு உதவி அலுவலர், ஒரு உதவியாளர் என 4 பேர் பணியாற்ற உள்ளனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஓட்டு மெஷின் செயல்பாடு தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.
கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளில் தலைமை ஒட்டு சாவடி அலுவலர், ஒட்டு சாவடி உதவி அலுவலர்கள் பயிற்சி பெற்றனர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் பயிற்சிக்கு வராமல் புறக்கணித்து விட்டதாக தெரிகிறது.
மாவட்ட அளவில் 17,122 அரசு அலுவலர்கள் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. இதில் 10 சதவீதம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரிசர்வ் அலுவலர்கள் என்ற வகையில் இவர்கள் பணி செய்வார்கள். ஒட்டு சாவடியில் முக்கியமான பணி நடத்த வேண்டிய அலுவலர்கள் பணியை புறக்கணிக்கும் வகையில் பயிற்சிக்கு வராமல் விட்டதால் தேர்தல் பிரிவு அதிகாரிகள் அதிருப்தியடைந்தனர்.
பயிற்சி வராதவர்களுக்கு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக 10 இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சிலர் பங்கேற்கவில்லை என தெரிகிறது, மாவட்ட அளவில் 406 பேர் பயிற்சியை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியானது. இவர்களுக்கு விளக்க நோட்டீஸ் அளித்து விசாரணைக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டது.
மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வராத அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது, இதில் சிலர் கலந்து கொண்டனர். மாற்று திறனாளிகள் பணி செய்ய முடியாத ஊழியர்களை கட்டாயம் தேர்தல் பணியில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
பயிற்சியை முறையாக வழங்கவில்லை. அந்தந்த பிரிவினருக்கு அந்த பணி தொடர்பாக பயிற்சி தராமல் வேறு பயிற்சி தரப்பட்டதாக கூறப்படுகிறது. ஒட்டு சாவடியில் தலைமை ஓட்டு சாவடி அலுவலர் பி1, பி2, பி3
என மூன்று அலுவலர்களுக்கு தனித்தனி பணிகள் இருக்கிறது. ஆனால் இவர்களுக்கு சம்பந்தம் இல்லாத பணி தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஓட்டு மெசின்கள் பயன்படுத்த வேண்டிய ரகசிய பேப்பர் தொடர்பாக இதுவரை எந்த பயிற்சியும் தரவில்லை.
அந்த பேப்பர் வந்தால் தான் பயிற்சி வழங்க முடியும் என தெரிவித்து குழப்பம் ஏற்படுத்தி இருக்கிறார்கள், சில அலுவலர்கள் விதிமுறை மீறி பணி வழங்கப்பட்டது. தேர்தல் பணியில் இருந்து விலக்கு தர வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு இ மெயில் அனுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
