கோவையில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்கள்…

கோவை மாவட்டத்தில் 450 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் முன்னாள் அமைச்சர் திமுகவின் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். சுமார் 3.17 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வைத்திருப்பது அபிடவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் விவசாய மற்றும் குடும்பத்தினரின் வட்டி தொழில் மூலமாக வருவாய் ஈட்டியதாக அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளார். தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி லைசென்ஸ் உடன் வாங்கி இருப்பதாக வேட்பு மனுவில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு ஆறு கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்துக்கள் இருக்கிறது. இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் கோவை மட்டுமின்றி கேரளாவிலும் சொத்துக்கள் இருக்கிறது.

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன் நான்கு கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். இவருக்கு கோவை மட்டுமின்றி சென்னையில் வீடுகள் அப்பார்ட்மெண்ட் உள்ளது. விவசாய நிலங்களும் இவர் வைத்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அம்மன் அர்ஜூனன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.அவர் மனைவி விஜயலட்சுமி மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார். அம்மன் அர்ஜூனன் மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர். அவர் பெயரில் அசையும்,

அசையா சொத்து என்ற வகையில் 4.45 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களும், மனைவி பெயரில் 6.88 கோடி ரூபாய் சொத்துக்களும், மருமகள் பெயரில் 6.09 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் இருக்கிறது.

மொத்தமாக குடும்பத்தின் பெயரில் 19 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து இருப்பதாக தெரியவந்தது. 30 ஆண்டிற்கு முன் வறுமை காரணமாக கோவைக்கு வந்தவர் அம்மன் அர்ஜூனன். இங்கே பல்வேறு தொழில் செய்து இவ்வளவு கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக தேர்தல் வேட்பு மனுவில் கணக்கு காட்டியுள்ளார்.

மளிகை பொருட்கள் வியாபாரம் என இவர் கூறியுள்ளார். குடும்பத்தினர் வசம் 1.80 கிலோ எடையில் தங்க நகைகள், 7.5 கிலோ எடையில் வெள்ளி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 3.21 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராமன், பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளர் தாமோதரன், சூலூர் கந்தசாமி, கவுண்டம்பாளையம் பி ஆர் ஜி அருண்குமார் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய வேட்பாளர்கள் பல கோடி ரூபாய் சொத்துள்ள மாபெரும் கோடீஸ்வரர்கள்.

இவர்களை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர்களும் கோடீஸ்வரர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தல் கோவை மாவட்டத்தில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கான கடும் போட்டியாக கருதப்படுகிறது.

செந்தில் பாலாஜி, எஸ் பி வேலுமணி உள்ளிட்ட சில வேட்பாளர்கள் மீது போலீஸில் வழக்கு பதிவாகியுள்ளது. எஸ் பி வேலுமணி மீது டெண்டர் தொடர்பான வழக்குகள் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *