கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளர்கள் நாளை வருகை
கோவை மாவட்டத்தில் மேட்டுபாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு சூலூர், சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்ட மன்ற தொகுதிகள் இருக்கிறது.
இதில் 5371 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் 90 பறக்கும் படை, 90 நிலையான கண்காணிப்பு படை அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தினமும் பல லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், வியாபாரிகள், மருத்துவமனைக்கு செல்பவர்களிடம் இதுவரை பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் கட்டுப்பாட்டு அறை, சி விஜில் செயலி மூலமாக பொதுமக்களிடமிருந்து தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நடைபெறும் தேர்தலை கண்காணிக்கவும், வேட்பாளர்களின் செலவு கணக்கு, பறக்கும் படை மற்றும் தேர்தல் பிரிவின் பணிகளை மேற்பார்வை செய்ய தேர்தல் பார்வையாளர்களாக வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு சட்ட மன்ற தொகுதிக்கு ஒரு பொது பார்வையாளர், ஒரு செலவின பார்வையாளர் என பேர் நியமிக்கப்பட்டனர். இதன்படி கோவை மாவட்டத்திற்கு 5 பொது பார்வையாளர்களும், 5 செலவின பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஐஜி அந்தஸ்தில் ஒரு போலீஸ் பார்வையாளர் நியமிக்கப்பட்டார். இவர்கள் 11 பேரும் இன்று கோவைக்கு வருகை தர உள்ளனர்.
தேர்தல் பொது பார்வையாளர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்ட மன்ற தொகுதிகளில் தேர்தல் விதிமுறை மீறல்கள் உள்ளதா என கண்காணிப்பார்கள், செலவின பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் முறையான செலவு கணக்கை தாக்கல் செய்வார்களா என்பதை கண்காணிப்பர்கள், சோதனை, கண்காணிப்பு பணிகளையும் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்வார்கள்.
