கோவையில் வீடியோ எடுக்க முயன்ற வாலிபரை விரட்டிய யானையால் பரபரப்பு ..

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்த ஆண் யானை ஒன்று பொன்னூத்து அம்மன் மற்றும் கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் சுற்றி வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை கதிர்நாயக்கன்பாளையம், லட்சுமி நகர் பகுதியில் வலம் வந்துள்ளது.

யானை வருவதை பார்த்த அந்தப் பகுதியை சேர்ந்த தொழிலாளி கமல் என்பவர் யானையை நோக்கி சென்றார் . அப்போது யானை அருகில் வந்த நிலையில் கமல் பயத்தில் யானையிடம் இருந்து தப்பி ஓட முயன்றார்.அப்போது கால் இடறி தவறி விழுந்துள்ளார்

அப்போது யானை அவரை தாக்க முயன்ற நிலையில் தப்பி வீட்டிற்குள்ளே சென்றுள்ளார். இதனை தொடர்ந்து யானை அங்கிருந்து சென்ற நிலையில் இது குறித்து கோவை வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் யானை தாக்க முயற்சி செய்த வீடியோ பதிவு வைரலாகியது. வாலிபர் யானையை தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றதால் யானை கோபம் அடைந்து அவரை தாக்க முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது . வனத்துறையினர் கூறுகையில் இது போன்ற அத்துமீறல் எதுவும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்தனர். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *