ரூ. 1800 கோடி ரெடி..6 வழிப்பாதை ஆகுது மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ்..

கோவை மாவட்டத்தில் பிரதான பைபாஸ் ரோடாக மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு அமைந்துள்ளது. கடந்த 1999 ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த பைபாஸ் தான் கோவை கேரளாவுக்கான இணைப்பு பாதையாக இருக்கிறது. இந்த பைபாஸ் ரோட்டில் சுங்க கட்டணம் வசூல் 5 மையங்களில் நிறுத்தப்பட்டது. மதுக்கரையில் மட்டும் சுங்க கட்டணம் பெறப்பட்டு வருகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் (நகாய்) சார்பில் இந்த பைபாஸ் ரோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பைபாஸ் பேராட்டில் வாகன நெருக்கம் அதிகமாகி விட்டது. 26.2 கி.மீ தூர பைபாஸ் ரோட்டை கனகர வாகனங்கள் கடந்து செல்ல 2 முதல் 3 மணி நேரமாகிறது. சில நேரங்களில் பீக் அவர்களில் மேலும் பல நிமிடங்கள் வாகனங்கள் காத்திருக்கும் நிலைமை இருக்கிறது. இது தொடர்பாக ஆய்வு நடத்திய நெடுஞ்சாலை ஆணையகம். மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் விரிவாக்கம் செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டது. இதில் முதல் கட்ட திட்ட அறிக்கை (டிராப்ட் டிபிஆர்) தயார் செய்யப்பட்டது.

இதில் 26.2 கி.மீ தூரம் பைபாஸ் ரோடு விரிவாக்கம் செய்ய உத்தேசமாக 1800 கோடி ரூபாய் செலவாகும்.

கட்டுமான பொருட்களின் விலைக்கு ஏற்ப கூடுதலாக 10 சதவீத தொகை செலவாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு 6 வழிப்பாதையாக அமையும். அதாவது கோவை அவினாசி ரோடு போல் அமைக்கப்படும். சென்டர் மீடியன் பகுதி மட்டும் சற்று சிறியதாக இருக்கும். சிந்தாமணிப்புதூர், கற்பகம் கல்லூரி சந்திப்பு சிக்னல் பகுதியில் பிரமாண்டமாக 2 மேம்பாலங்கள் அமைக்கப்படும். இருகூர், செட்டிபாளையம் ரயில் பாதை சந்திப்பிலும் உயர் மட்ட பாலம் அமைக்கப்படும் .

இதில் இடது பக்கம் அதாவது கேரளா நோக்கி செல்லும் பகுதி மட்டும் 4 வழிப்பாதையாக இருக்கிறது. வலது பக்கம் 3 வழிப்பாதையாக அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக மேம்பாலங்கள் அமையும் பகுதி 7 வழிப்பாதையாக அமையும் இது தவிர பட்டணம், வெள்ளலூர் ரோடு என சில முக்கிய சந்திப்பு இடங்களிலும் மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளது. இதற்காக சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. திட்ட பாதையில் 12 மேம்பாலம் அமைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மேம்பாலங்கள், ரோடு அமைப்பு, வளைவு, மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்கள், வாகன நெருக்கம், வாகனங்கள் சந்திப்பு இடங்கள் தொடர்பாக நெடுஞ்சாலை ஆணையகம் கூகுள் எர்த் மூலமாக தகவல்களை சேகரித்து வருகிறது. மேலும் கூகுள் எர்த் மூலமாக தினசரி வாகனங்களின் இயக்கம், பாதிப்பு உள்ள பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் இறுதி திட்ட அறிக்கை

வெளியாகும். அதற்கு பின்னர், ரோடு விரிவாக்கம் செய்ய டெண்டர் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 1999ம் ஆண்டில் கட்டி இயக்குதல் (பிஓடி) முறையில் பைபாஸ் ரோடு போடப்பட்டது. இந்த முறை ஹாம் என அழைக்கப்படும் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான முறையில் பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை ஆணையகம் 40 சதவீதம், திட்டம் செய்யும் நிறுவனம் 50 சதவீதம் என்ற முறையில் திட்ட தொகை | செலவிடப்படவுள்ளது. இந்த முறையிலான திட்டத்திற்கு சுங்க கட்டணம் வசூலிப்பதா, கூடாதா என இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தற்போதுள்ள மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு மற்றும் கையகத்தில் 45 மீட்டர் அகலத்தில் நிலம் தயாராக இருக்கிறது. எனவே நிலம் கையகம் செய்வதில் பிரச்னை இருக்காது, மேலும் தற்போதுள்ள ரோட்டை தரம் உயர்த்தி அமைத்து விட்டு புதிய பைபாஸ் அதற்கு இணையாக அமைக்கப்படவுள்ளது, மாற்று பாதை இதற்காக அமைக்கப்பட மாட்டாது. பைபாஸ் ரோடு விரிவாக்கம் கோவையின் வளர்ச்சிக்கு பிரதானமாக இருக்கும். ஏனெனில் ராணுவ பூங்கா, செமி கண்டக்டர் பூங்கா. ஏரோ ஸ்பேஸ், லாஜிஸ்டிக் பார்க் போன்றவை பைபாஸ் ரோட்டை ஒட்டி அமைக்கப்படவுள்ளது. எனவே பைபாஸ் ரோடு விரிவாக்க பிரதான எதிர்பார்ப்பாக இருக்கிறது விரிவாக்க பணிகளை செய்வதற்கான சாத்திய கூறுகளை கோவை கோட்ட நெடுஞ்சாலை ஆணையகத்தின் கோட்ட பொறியாளர்

செந்தில்குமார் ஆய்வு செய்து வருகிறார் தற்போதுள்ள பைபாஸ் ரோட்டை ஒட்டி வளைவு, நெளிவு இன்றி ஈரான போக்குவரத்திற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *