கோவை திமுக கோட்டை… உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு…!
கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் ரோட்டில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது மக்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: நான் இங்கே வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஆனால் இங்கே பார்க்கும் போது நீங்கள் ஏற்கனவே உதயசூரியனுக்கு ஓட்டு போட முடிவு செய்திருப்பது தெரிகிறது. போன தடவை நான் இங்கே வந்தேன் பிரச்சாரம் செய்தேன். ஆனால் நீங்கள் வெற்றி வாய்ப்பு தரவில்லை.
ஆனால் இந்த முறை வெற்றி வாய்ப்பு தர வேண்டும். ஒட்டு மெரினில் தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு 2வது பட்டன். இதேபோல் வடக்கு தொகுதி வேட்பாளர் துரை செந்தமிழ் செல்வனுக்கும் 2வது பட்டனில் தான் சின்னம் உள்ளது.
பட்டன் 2வதாக இருந்தாலும் அவர்கள் முதலிடத்திற்கு வர வேண்டும். கோவை மாவட்டத்தில் 10க்கு 10 தொகுதி வெற்றி என்பதை நாம் உறுதி செய்து காட்ட வேண்டும். கோவை மாவட்டத்தின் எழுச்சியை பார்க்கும் போது அனைத்து தொகுதியிலும் வெற்றி உறுதி என தெரிகிறது.
செந்தில் பாலாஜி மேற்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றி வைத்துள்ளார். இவரின் வேகத்தை உழைப்பை பார்த்த சக்திகள், எதிரிகள் இவரை முடக்க பார்த்தார்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பெரும் நெருக்கடி தந்தார்கள். ஆனால் சங்கிகளின் கனவு எல்லாம் வீணாகி விட்டது.
சங்கிகள், அவரை சார்ந்தவர்கள் கோவை அவர்களின் கோட்டை என சொல்லி கொண்டிருக்கிறார்கள். அது இல்லை இது திமுகவின் கோட்டை என செந்தில் பாலாஜி நிரூபித்து வருகிறார்.
செந்தில் பாலாஜிக்கு கரூர் பிறந்த வீடாக இருந்தாலும் கோறை புகுந்த வீடாக இருக்கிறது. நிச்சயம் பிறந்த வீட்டை போல் புகுந்த வீட்டையும் கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறதா, அவர் கடும் உழைப்பாளி. வெறும் தேர்தலுக்கு மட்டும் உங்களை அவர் சந்திப்பவர் அல்ல. கூப்பிட்ட குரலுக்கு ஓடி சரி செய்பவர்.
அவருக்கு பெரிய வெற்றி தர வேண்டும் அதேபோல் வடக்கு தொகுதி வேட்பாளருக்கும் வெற்றி தர வேண்டும். அவரிடம் எந்த கோரிக்கை தந்தாலும் நிறைவேற்றி தருவார். இந்த கோவை தெற்கு தொகுதிக்கு கடந்த ஆண்டில் ஏகப்பட்ட திட்டங்கள் தரப்பட்டது. 1800 கோடி ரூபாய் செலவில் அவினாசி ரோடு மேம்பாலம் கட்டி தந்தது திராவிட மாடல் அரசு.
காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் செலவில் பெரியார் நூலகம், 132 கோடி ரூபாய் செலவில் செம்மொழி பூங்கா, 57 கோடி ரூபாய் மதிப்பில் பெரிய கடை வீதியில் தங்க நகை பூங்கா, வாலாங்குளம் பகுதியில் நீர் வடிகால், 8 கோடி ரூபாய் செலவில் ராஜ வீதியில் புதிய பள்ளி கட்டடங்கள் வடகோவை மரக்கார நஞ்சப்பா வீதியில் புதிய
பள்ளி கட்டடம், காந்திபுரம் சத்தி சாலையில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட், காட்டூரில் கோடி ரூபாய் செலவில் அறிவுசார் மையம் குறிஞ்சி கார்டன், சரோஜினி வீதியில் சாலை சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டது.
இதேபோல் கோவை வடக்கு தொகுதியில் 4 கோடி ரூபாய் செலவில் மருதமலை ரோடு சீரமைப்புபணி, 4 கோடி ரூபாய் செலவில் மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிய மார்க்கெட் கட்டடம் சங்கனூர் ஓடை புனரமைப்பு பணி. 3 கோடியில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம்,
750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பில்லூர் 3வது குடிநீர் திட்டம், கே. கே புதூர் மாநகராட்சி பள்ளியில் யோக பாக மையம் 5 கோடி ரூபாய் செவ்வில் பக்தர்கள் வசதிகளுக்காக மருதமலையில் லிப்ட் அமைக்கப்பட்டது. பெரிய கடை வீதி, கிராஸ்கட் ரோடு பகுதியில் மல்டி லெவல் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்,
கார் பார்க்கிங் வசதி தேவை என வியாபாரிகள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நம் ஆட்சி திரும்ப வந்ததும் நம் முதல்வர் இதை செய்து தருவார். இதேபோல் புலியகுளம், அம்மன் குளம், ஹோசிமின் நகர், கல்லுக்குழி பகுதி மக்கள் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம் ஆட்சி வந்ததும் முதல்வர் இதை செய்து தருவார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் கட்டணமில்லா பஸ் வசதி செய்து கொடுத்தோம். காலை உணவு திட்டம், கல்லூரியில் படிக்க மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை நம் முதல்வர் வழங்கினார். 2 மாதம் முன் 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வேப்டாப் வழங்கியிருக்கிறோம்.
இப்படி பல திட்டங்களை செய்து தந்து விட்டு தான் நான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் மகளிர் உரிமை தொகை கடந்த 3 ஆண்டில் 131 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை நிறுத்த பாஜகவும் அதிமுகவும் முயற்சி செய்தது. நீதிமன்றத்திற்கு போனார்கள்.
ஆனால் நம் முதல்வர் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் கோடை காலம் என 5 ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கினார். காலை 6 மணிக்கு வங்கி கணக்கிற்கு பணம் போனது. நம் மகளிர் காலை 9 மணிக்கு போய் பணத்தை எடுத்து விட்டார்கள்.
ஏன் என்றால் நீங்கள் ஷார்ப்பானவர்கள் மோடி அரசு மினிமம் பேலன்ஸ் என அந்த தொகையை எடுக்காமல் தடுக்க நீங்கள் பணத்தை எடுத்து விட்டீர்கள். அதே மாதிரி ஷார்ப்பாக வரும் 23ம் தேதி தேர்தலில் தெற்கு, வடக்கு தொகுதியில் நீங்கள் உதய சூரியனுக்கு ஓட்டு போட வேண்டும் வாக்கு எண்ணிக்கையின் போது இந்த தொகுதி வேட்பாளர்கள் முதலிடத்திற்கு வர வேண்டும்.
அடுத்த ஆட்சியில் மகளிர் உரிமை தொகை 2 ஆயிரம் ரூபாய் தருவோம். காலை உணவு திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கப்படும். முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் பார்த்து இருப்பீர்கள் ஆனால் முரட்டு அடிமை பார்த்து இருப்பீர்களா யார் எந்த அடிமை தெரியுமா, மோடியின் நெம்பர் 1 முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி.
இதுக்கு தான் இவ்வளவு பஞ்சாயத்து மெட்ரோ திட்டத்திற்கு பணம் தந்தார்களா, பாஜக அரசு தமிழகத்திற்கு எதாவது திட்டங்கள் தந்தார்களா. கல்வி நிதி தரவில்லை ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு திட்டங்கள் இல்லை, தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை முரட்டி அடிமை என சொன்னதற்கு எடப்பாடிக்கு கோபம் வந்து விட்டது. எனக்கு அனுபவமில்லை என்றார்.
ஆமாம் அவரை போல் காலில் படுத்து கிடந்த அனுபவம் எனக்கு கிடையாது. என்ன திட்டு திட்டறாரு தெரியுமாங்க, கெட்ட வார்த்தையில் தான் திட்டலை. செத்து போன்னு சொல்லிட்டாரு. என் உயிர வாக்குற அப்படீன்டாரு
இந்த தேர்தலில் டில்லி அணி, தமிழ்நாடு அணிக்கு போட்டி நாய் டில்லி அணியை தோற்கடிக்க வேண்டும். 10 தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி ஆக்கி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் செய்து காட்டுவோமா, இன்னும் தேர்தலுக்கு 6 நாட்கள் இருக்கிறது. வாக்காளர்களை சந்தித்து பேசுங்கள்.
ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என சொல்லுங்கள் சங்கி கூட்டத்தை தமிழ்நாட்டிற்குள் விடக்கூடாது என் தொகுதி வெற்றியை விட கோவை வடக்கு, தெற்கு தொகுதி வெற்றி முக்கியம் 6 நாட்கள் பிரச்சாரம் செய்வீர்களா. எங்கே தோற்றோமோ அங்கேயிருந்து நாம் ஜெயிக்க வேண்டும்.
இது திமுகவின் கோட்டை என நிரூபிக்க வேண்டும். பாசத்துடன் உரிமையுடன் தலைவரின் மகனாக கேட்கிறேன். கோவைக்கு தேவையான திட்டங்களை தருவோம் என உறுதி தருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
போட்டோ, ரயில் பொம்மை வைத்து கிண்டல்
கூட்டத்திலிருந்த வாலிபர் ஒருவர் எடப்பாடி டில்லிக்கு சென்ற போது முகத்தை மூடிய போட்டோவை உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தார். அதன் கவரை பிரித்து பார்த்த உதயநிதி ஸ்டாலின், இந்த போட்டோக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, இது என் கணக்கில் வராதுங்க இந்த போட்டோவில் இருப்பது எடப்பாடி தான் மோடியை சந்தித்து விட்டு அழுதபடி முகத்தை மறைத்து சென்றார் எனக்கூறினார்.
மேலும் சசிகலா காலில் எடப்பாடி விழுந்த கிடந்த போட்டோவையும் காட்டி பேசினார். அப்போது தொண்டர்களில் ஒருவர் அந்த போட்டோ வேண்டும் என்றார் இதை கேட்ட உதயநிதி ஸ்டாலின் என்ன செய்ய போறீங்க, பிரேம் போட்டு வீட்டுல மாட்ட போறீங்களா எனக்கூறினார் .
மேலும் மெட்ரோ ரயில் திட்டம் வராமல் முடக்கிய ஒன்றிய அரசை கிண்டல் செய்ய மெட்ரோ ரயில் பொம்மையை கூட்டத்தில் காட்டி பேசினார். இரண்டு சிறுவர்களை பிரச்சார வாகனத்தில் ஏற்றி உட்கார வைத்து ஜாலியாக பேசினார். இந்த கூட்டத்தில் பல ஆயிரம் தொண்டர்கள் குவிந்தனர்.
