டாஸ்மாக் கடைகள் 21ம் தேதி முதல் மூன்று நாட்கள் மூடல்…
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள், எப்எல் 2, எப்எல் 3 உரிமம் பெற்ற மதுபான கடைகள் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி வரை மூடப்படும்.
3 நாட்கள் அனைத்து வகையான மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும். மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஓட்டு எண்ணிக்கை நாளான வரும் மே மாதம் 4ம் தேதியும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும். அன்றைய தினமும் முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்படமாட்டாது என மாவட்ட நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
தேர்தலில் முன்னிட்டு மதுபானங்களை பல்க் சேல் என்ற பெயரில் பெட்டி பெட்டியாக விற்பனை செய்யக்கூடாது. ஒருவருக்கு பத்து மது பாட்டில்கள் மட்டும் அதிகபட்சமாக வழங்கலாம். அதிக மது பாட்டில்களை பதுக்கி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மற்றும் கலால் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
