தெற்கு தொகுதியில் தேர்தல் ரத்தா…? பதில் தர கோவை கலெக்டர் மறுப்பு

கோவை மாவட்டத்தில் தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிகமாக நடப்பதாக புகார் இருந்துள்ளது.

திமுகவினர் ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருவதாக அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். அம்மன் அர்ஜூனன், சுயேட்சை வேட்பாளர் புகார் தொடர்பாக நேற்று கலெக்டர் பவன்குமாரிடம் நிருபர்கள் கேட்டனர்.

அப்போது கலெக்டர், 30 கோடி ரூபாய் பணத்துடன் வாகனம் சென்றதா, வெளியூர் நபர்கள் தங்கியிருந்தார்களா, ஒட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் தரப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதில் தரவில்லை. ஆனால் அனைத்து புகார்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டது, விதிமுறை மீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பல்வேறு பகுதியில் வழக்குகள் பதிவானது என தெரிவித்தார். மேலும் தெற்கு தொகுதியில் தேர்தல் ரத்து செய்வது தொடர்பான கேள்விக்கு கலெக்டர் பதில் தரவில்லை. ஒரு கட்டத்தில் அவர் பேச மறுத்து வேகமாக புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *