கோவை மாவட்டத்தில் தயார் நிலையில் ஓட்டு சாவடிகள்…15223 ஓட்டு மெஷின்கள் குவிப்பு …!
கோவை மாவட்டத்தில் ஓட்டு மெசின்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக, அதற்கென ஒதுக்கப்பட்ட ஸ்டராங்க் ரூம்களில் வைக்கப்பட்டிருந்தது .
மேட்டுப்பாளையம் தொகுதிக்கு என்எல்பி பாலிடெக்னிக், சூலூர் தொகுதிக்கு சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு பேரூர் தாசில்தார் அலுவலகம்,
கோவை தெற்கு தான் சட்டமன்ற தொகுதிக்கு ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர் தொகுதிக்கு சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு தொகுதிக்கு மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி தொகுதிக்கு என்ஜிஎம் கலை அறிவியல் கல்லூரி,
வால்பாறை தொகுதிக்கு ஆனைமலை தாசில்தார் அலுவலகம் போன்றவற்றில் ஓட்டு பதிவு மெசின்கள் மற்றும் கட்டுப்பாட்டு மெசின்கள் வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 6323 ஒட்டு பதிவு மெசின்கள், 4272 கன்ட்ரோல் யூனிட்டுகள், 4628 சின்னம் காட்டும் மெசின்கள் என 15,223 மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த மெசின்கள் அனைத்தும் 330 வாகனங்களில் 3563 ஓட்டு சாவடிகளுக்கு வாகனங்களின் மூலமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு, துணை ராணுவ படை பாதுகாப்புடன் இன்று ஓட்டு சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மெசின்களுடன் 43 வகையான பொருட்களும் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அழியாத மை டம்மி பேலட், பார்வையற்றவர்களுக்கான பேலட் பேப்பர், ரகசிய பேப்பர்கள், வாக்காளர் சிலிப், டெஸ்ட் வாக்கு படிவம், அரக்கு, சீல், ஸ்டேஷனரி பொருட்கள் போன்றவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு ஒட்டு சாவடியிலும் ஒரு தலைமை ஒட்டுச்சாவடி அலுவலர். 3 உதவி அலுவலர் என 4 பேர் பணியாற்ற உள்ளனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஓட்டு மெஷின் செயல்பாடு தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.
கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர். கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நாளை நடக்கவுள்ளது. மாவட்ட அளவில் 17,122 அரசு அலுவலர்கள் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது.
இதில் 10 சதவீதம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் ஓட்டு சாவடி அல்லாத பணிகளில் சுமார் 2 ஆயிரம் அலுவலர்கள் பணியில் உள்ளனர். சுமார் 20 ஆயிரம் அலுவலர்கள் இன்று தேர்தல் பணி செய்யவுள்ளனர். அனைத்து ஓட்டு சாவடிகளும் கண்காணிப்பு கேமரா, வெப் காஸ்டிக் முறையிலான கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறது.
சி விஜில், சுவிதா செயலி மூலமாக ஓட்டு சாவடிகள், அலுவலர்களின் பணி விவரங்கள் ஆன்லைனில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
