2 மணி நேரத்துக்கு ஒரு முறை ஓட்டு சதவீதம் அறிவிப்பு…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3563 ஒட்டு சாவடிகள் இருக்கிறது.

இவற்றில் 183 சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் உள்ளது. இந்த ஓட்டு சாவடிகளில் நாளை ஒட்டு பதிவு நடக்கவுள்ளது, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்படும்.

காலை 5.30 மணிக்கு ஏஜென்டுகள் முன்னிலையில் மாதிரி ஓட்டு பதிவு நடத்தப்படும். இதில் எத்தனை ஏஜன்டுகள் இருந்தாலும் அவ்வளவு பேரும் மாடல் மெசினில் ஓட்டு போடலாம். இந்த ஒட்டுக்கள் அரை மணி நேரத்திற்குள் நடத்தப்படும். இந்த ஓட்டுக்கள் எண்ணிக்கை தெரிவிக்கப்படும். பின்னர் அனைத்து ஏஜன்டுகள் முன்னிலையில் ஒட்டுக்கள் அழிக்கப்பட்டு பூஜ்ஜிய எண்ணிக்கை காண்பிக்கப்படும்.

அதற்கு பின் சரியாக 7 மணிக்கு ஓட்டு மெசின் நேரத்தின் படி ஓட்டு பதிவு துவக்கப்படும்.

ஒட்டு மெசின்களை கண்காணிப்பு கேமரா, நெட்வொர்க் இல்லாத பகுதியில் வீடியோ கேமரா மூலாக கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டு சதவீதம் கண்டறியப்படும். ஓட்டு சாவடிகள் அனைத்தும் தேர்தல் பிரிவின் கட்டுபாட்டிற்குள் வந்து விட்டது.

அந்த பகுதி குடியிருப்பு மக்கள் தவிர மற்ற யாரும் அங்கே அனுமதிக்கப்படவில்லை. வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது ஓட்டு சாவடிக்கு செல்லும் அலுவலர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். ஓட்டு சாவடிகள் சாய்வு தளம், உப்பு சர்க்கரை கரைசல் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

வெயில் தாக்கம் தடுக்க சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்களுக்கு உதவி செய்ய ஹெல்ப் டெஸ்க் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *